2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'3 ஏக்கரை விடுவித்தால் பிரச்சினைக்கு தீர்வு'

Menaka Mookandi   / 2016 ஜூன் 28 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், எம்.றொசாந்த்

'அச்சுவேலி – அராலி வீதியை திறப்பதற்கு, இராணுவத்தினர் இன்னமும் 3 ஏக்கர் காணியை விடுவித்தால் போதுமானதாக இருக்கும், இந்த நிலையில், எங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள புதிய வீதி எங்களுக்கு வேண்டாம்' என குரும்பசிட்டி மக்கள் கூறியுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த 201.3 ஏக்கர் காணியை, கடந்த சனிக்கிழமை (25) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூகுரே ஆகியோர், உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகத்திடம் கையளித்தனர்.

இதன்போது, மேற்படி அச்சுவேலி – அராலி வீதியும் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களின் காணிகளை ஊடறுத்து கட்;டுவன் சந்தியிலிருந்து குரும்பசிட்டி வரையில் இராணுவத்தினர் புதிய வீதியொன்றை அமைத்துக் கொடுத்துள்ளனர்.

தங்களுடைய காணிகளை ஊடறுத்து அமைக்கப்பட்டுள்ள வீதிக்கு ஒரு போதும் தாங்கள் அனுமதி வழங்க முடியாது எனவும், தங்கள் காணிகளுக்கு எல்லைகள் போடவுள்ளதாகவும், அச்சுவேலி – அராலி வீதியை விடுவிக்க வேண்டும் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

இந்த வீதியை உபயோகப்படுத்த இராணுவத்தினர் வசமுள்ள 3 ஏக்கர் காணியை விடுக்க வேண்டும் எனவும் மக்கள் கூறினர். இந்த விடயத்தை இன்று செவ்வாய்க்கிழமை (28) அங்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X