2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'ஐந்து பொலிஸாரின் இடமாற்றம் சந்தேகத்தைத் தூண்டுகின்றது'

Gavitha   / 2016 ஜூன் 25 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கடந்த இரு வருடங்களாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல்களை முறியடித்து தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது' என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலளார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த இரண்டு வருடங்களாக, கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்புடைய ஐந்து சம்பவங்களை திறமையான முறையில் முறியடித்து, அவற்றை கைப்பற்றியிருந்த யாழ்ப்பாணம், நெல்லியடி, இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றியுள்ள இவர்களுக்கு, தற்போது சிறு குற்றத் தடுப்பு பிரிவில் பணிகள் வழங்கப்பட்டுள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இதற்கான காரணம் கண்டறியப்படல் வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

'தற்போதுள்ள நிலையில்,போதைப்பொருட்கள் அதிகம் கடத்தப்படக்கூடிய கேந்திர நிலையமாக வடமாகாணம் மாறி வருகின்றது. இதனை தடுத்து நிறுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில், நாடாளுமன்றத்துக்கு பல முறை நான் வழியுறுத்தியுள்ளேன். இதற்காக, குறித்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அதே பகுதியில் உள்ள பொலிஸார் நியமிக்கப்பட வேண்டியதற்கான அவசியம் குறித்தும் நான் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், திறமையாக செயற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தவறானது. எனவே, இது குறித்து உடனடியாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன்' என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X