Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மார்ச் 22 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார், க.ஆ.கோகிலவாணி
பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றபோது எங்கள் இனத்துக்குள்ளும் பல ஒடுக்கு முறைகள் இருப்பது கவலையளிக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள், முதலமைச்சரை அவரது வதிவிடத்தில் செவ்வாய்க்கிழமை (21) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள், வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், சவால்கள், பாரபட்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததுடன் அவை தொடர்பிலான மகஜரையும் கையளித்தனர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,
“தொழிலாளர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு அமைப்புகள் இருப்பதைப் போன்று, வடக்கு வாழ் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஓர் ஒன்றியம் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த ஒன்றியம் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், அதேவேளை தங்கள் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகள் மேற்கொள்வேன்” என்றார்.
இச்சந்திப்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளாரும், சமூக செயற்பாட்டாளருமான பெ.முத்துலிங்கம், மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட மலையக மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பு தொடர்பில், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனப் பணிப்பாளாரும், சமூக செயற்பாட்டாளருமான பெ.முத்துலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கு வாழ் மலையக மக்களுக்கென, அரசியல் பிரதிநிதித்துவம் அவசியம் என்பதை, வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பில், எடுத்துரைத்தோம்.
இலங்கையில் இடம்பெற்ற கலவரங்களின்போது, இடம்பெயர்ந்து சென்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் குடிபெயர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வடக்கு மாகாணத்தில், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வரும் மக்கள், யுத்தத்துக்கான அபிவிருத்திகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
மேற்படி மக்கள் குடியிருக்கும் கிராமங்கள் புறம் அல்லது நகர் என்ற பெயரிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளிலிருந்து இம்மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். கல்வி, உட்கட்டமைப்பு வசதிகளில் இம்மக்கள் பின்தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் தமக்கான அரசியல் பிரதிநித்துவதத்தை தற்போது உணர்ந்துள்ளனர். இவ்வாறு உணர்ந்ததன் காரணமாகவே, அம்மக்கள் வடக்கு மாகாண மலையக மக்கள் ஒன்றியத்தை ஸ்தாபித்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சருடனான சந்திப்பின்போது, மேற்படி விடயங்களையே நாங்கள் வலியுறுத்தி கூறினோம்” என்றார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago