2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் திருப்பதியில்லை

Kogilavani   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றதில் தனக்கு திருப்பதியில்லையென இணைத்தலைவர்களில் ஒருவரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் அவர் கருத்துக்கூறுகையில், “ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் என்ன கதைப்பது என்பது பற்றி முன்னரே ஒழங்குபடுத்தி கதைக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணமுடியும். அதனைவிடுத்து பல விடயங்களையும் ஒரே கூட்டத்தில் கதைத்து எவ்வித பயனும் இல்லை. இனிவருங் கூட்டங்களில் பிரச்சினைகளை ஒழுங்குபடுத்தி கதைப்பதற்கு பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகணன் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X