2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் முறையே எதிர்வரும் 29ஆம், 30ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபங்களில் நடைபெறவுள்ளன.

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு இணைத்தலைவர்களாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவஞானம் சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு இணைத்தலைவர்களாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரண்டு மாவட்டங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X