2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் ஒரு வடமாகாண சபை உறுப்பினர்

Niroshini   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலுமுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் செயற்படுவதற்காக, வட மாகாண சபை உறுப்பினர்களை ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.

பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி, ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுப்பதுடன், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மட்டும் தன்னிடம் முறையிடுமாறு முதலமைச்சர் தெரிவித்ததுள்ளார்.

இதன்மூலம், வட மாகாணத்துக்குட்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறைசார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் நடைமுறைப்படுத்துவதற்கு வடமாகாண சபையால் முடியும் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அவர்கள் விபரம் வருமாறு


01.    அனந்தி சசிதரன்-    வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை)
02.    எம்.கே.சிவாஜிலிங்கம்-    வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி)
03.    விந்தன் கனகரட்ணம் -   காரைநகர்
04.    பா.கஜதீபன்-     நல்லூர்
05.    ச.சுகிர்தன் -   வேலணை தெற்கு, நெடுந்தீவு
06.    கே.சயந்தன்-    யாழ்ப்பாணம்
07.    கே.சர்வேஸ்வரன்-    கரவெட்டி
08.    ஆ.பரஞ்சோதி-    உடுவில்
09.    சி.தவராசா-     பருத்தித்துறை
10.    வே.சிவயோகன்-    கோப்பாய்
11.    எஸ்.அகிலதாஸ் -   ஊர்காவற்றுறை
12.    கே.தர்மலிங்கம்-    சங்கானை, சண்டிலிப்பாய்
13.    இமானுவல் ஆர்னோல்ட்-    சாவகச்சேரி

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X