2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

காக்கைதீவு இறங்குதுறை நவீனமயப்படுத்தப்படவுள்ளது

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

காக்கைதீவு மீன்பிடி இறங்குதுறை நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கியங்க, அபிவிருத்திக்குத் தேவையான நிதியை கணக்கிடும் வகையில் மொரட்டுவ தொழில்நுட்ப பல்கலைக்கழத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இறங்குதுறையை ஆய்வு செய்து வருகின்றனர்.

வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த இறங்குதுறையை சாவல்கட்டு, காக்கைதீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், உயரப்புலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 மீனவர்கள் பயன்படுத்தி வருவதுடன், சுமார் 200 வள்ளங்கள் இந்த இறங்குதுறை வழியாக கடலுக்குச் சென்று வருகின்றன.

இந்த இறங்குதுறை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட போதும், மீனவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் அது செய்யப்படவில்லை. குறிப்பாக மீனவர்களின் வள்ளங்களைக் கட்டுவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

இந்தக் குறைபாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட கிராமியக் கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கடற்றொழில் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அதன் பலனாக இறங்குதுறையை நவீன முறையில் பல வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய அமைச்சு முன்வந்து, தற்போது ஆய்வுகளைச் செய்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X