2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'கொச்சைப்படுத்தாதீர்'

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

ஒரு சில ஆசிரியர்கள் விடும் தவறால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு நமது சமூகம் இடமளிக்கக்கூடாது என மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இ.த.விக்னராஜா தெரிவித்தார்.

சர்வதேச சித்திரவதைகள் எதிர்ப்பு தினத்தையொட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை (30) யாழில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்;றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
'எமது நாட்டு அரசியல் அமைப்பில் சித்திரவதை சம்பந்தமான உறுப்பு உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால், சித்திரவதையினை சட்டத்தின்படி பார்க்கும் போது முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இருந்தும் கட்டுப்படுத்த முடியும். இவை சட்டத்தின் அடிப்படையில் உள்ளவை. ஆனால், தற்போது சட்டத்துக்கு அப்பால், எமது நாட்டில் போர்க்காலத்தில் பல சித்திரவதைகள் இடம்பெற்றன மட்டுமல்லாமல் நாளாந்தம் நமது சமூகம் சித்திரவதைக்கு உட்படுகின்றது.

இதனை நிறுத்துவதற்கு அதிகாரிகள் மட்டுமல்லாமல் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும் முன்வரவேண்டும். தற்போது மாணவர்கள், யுவதிகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களை குறைகூறுவதில் பயனில்லை. சமாதானம் தொடர்பான கருத்துகளை மாணவர்கள் தமது கல்விப் பருவத்தில் இருந்து அறிய வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான செய்திகள் நாளாந்தம் வெளி வருகின்றன. ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை வைத்து, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X