2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'கூட்டத்தில் அரசியல் பேசினால் வெளியேறுவேன்'

Niroshini   / 2016 ஜனவரி 25 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

இணைத்தலைவர்கள், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தங்கள் கட்சி மற்றும் தங்கள் சார்ந்த அரசியல் விடயங்களை பேசிக்கொண்டிருந்தால், கூட்டத்திலிருந்து வெளியேறுவேன் என வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.காதர் மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது, இணைத்தலைவர்கள் உரையாற்றுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள், தங்களின் அரசியல் சார்ந்த விடயங்களையே பேசினர்.

இதனால் ஆத்திரம் கொண்ட பிரதி அவைத்தலைவர், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் என்பது மாவட்டத்தின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயம். அங்கு வைத்து கட்சி அரசியல் கதைப்பதை தவிர்க்க வேண்டும்.
அபிவிருத்தி விடயங்களை கதைக்காமல் அரசியல் சார்ந்த விடயங்களை கதைத்தால் கூட்டத்தை விட்டு வெளியேறுவேன் என்றார்.

'மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள், மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் உள்ளடங்கிய அறிக்கையானது, கூட்டம் நடைபெறுவதற்கு 1 வார காலத்துக்கு முன்னர் கலந்துகொள்பவர்களிடம் கையளித்திருக்க வேண்டும்.

ஆனால், இங்கு அவ்வாறு கையளிக்கப்படவில்லை. அதனால் அதனை ஏற்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X