2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குடியேறாத வீட்டுத்திட்ட வீடுகளில் குடிக்கும் இளைஞர்கள்

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில், வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டில் குடியேறாமையால் அங்கு செல்லும் இளைஞர்கள் சிலர் குடியும் கும்மாளமுமாக இருக்கின்றனர்.

அருணோதயக் கல்லூரியின் மேற்கு புறத்தில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு அருகில் கல்லூரிகளும் வகுப்பறைகளும் காணப்படுகின்றன. இதனால், வீட்டில் வந்து மதுபானம் அருந்தும் இளைஞர்கள், மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். மாணவிகளை தகாத வார்த்தைகளால் ஏசுகின்றனர்.

மேலும், இரவு வேளைகளில் சில பெண்களையும் அந்த வீட்டுக்கு இளைஞர்கள் அழைத்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அப்பகுதிமக்கள் கூறினர்.

வீட்டுத்திட்டங்கள், வீடு தேவையானவர்களுக்கு வழங்கப்படாமல் 2, 3 வீடுகளை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டமையாலேயே இவ்வாறான சமூகச் சீரழிவுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X