2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'காணிகளை விடுத்தால் தான் நல்லிணக்கம் ஏற்படும்'

George   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

'தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இருக்கும் பொதுமக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதனூடாகவே துரிதமான மீள்குடியேற்றத்துடன் சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த முடியும்' என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்கதூதுவர் அதுல் கெஷாப், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்காவை பலாலி படைத்தளத்தில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

'மீள்குடியேற்றம் செய்யப்பட்;ட பல இடங்களுக்கு சென்ற போது வீடுகள், காணிகள், தேவாலயங்கள், பாடசாலைகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொடர்ந்தும் பொதுமக்களுடைய காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

எனவே, பொதுமக்களுடைய காணிகளை விடுவித்தால் மட்டுமே இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியும்' என தூதுவர் எடுத்து கூறினார்.

அத்துடன், யாழ். குடாநாட்டின் நிலமைகள் தொடர்பில் இராணுவத்தளபதியிடம் கேட்டறிந்து கொண்டார்.

'போருக்கு பின்னர் பொதுமக்களின் வாழ்வியல், வாழ்வாதரம் சுகாதார வசதிகளுக்கு படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்' என்று விளக்கிய தளபதி, இராணுவத்தின் மனிதவலுவுடன் கீரிமலை பகுதியில் அமைத்துவரும் வீட்டுத்திட்டம் தொடர்பில் தூதுவருக்கு எடுத்து கூறியுள்ளார்.

இதன்போது யாழ். மாவட்ட கட்டளை தபதியினால் அமெரிக்க தூதுவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X