Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
“காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்தார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தார். அதன்போது அவர், மேலும் கூறியுள்ளதாவது,
“காணாமற் போனவர்களின் தொடர்ச்சியான போராட்டம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ். வடமராட்சி, திருகோணமலை ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இவர்களில் பலரும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் நோயாளிகள். வெயிலிலும் குளிரிலும் இரவு, பகலாக தற்காலிகக் கொட்டகைகளில் இருந்தவாறு போராடுகின்றார்கள்.
அவர்கள் தங்களுடைய உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்துவிட்டார்களா என அறிய விரும்புகின்றார்கள். பிரதமர் உட்பட பலரும், மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். இறந்திருக்கக் கூடும் என பிரதமர் தெரிவிக்கின்றார். ஆனால், அவர்கள் கைது செய்யப்பட்டு பலவருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என, உறவினர்கள் கூறுகின்றார். அவர்களைக் கண்டுபிடிப்பது தங்களுக்குக் கஷ்டமாக இருக்காது.
எனவே, குறைந்தளவுக்கேனும், இவர்களுக்காக பின்வருவனவற்றையாது தங்களால் செய்யமுடியும் என எதிர்பார்கின்றேன். காணமற் போனோர் தொடர்பான 'பரணகம' அறிக்கையை இதுவரை வெளியிடாவிட்டால், அதனை வெளியிடல், காணமற் போனவர்களில் பத்திரிகைகளில் இணங்காட்டப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைக்கு உத்தரவிடல், நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தாது இதுவரை தடுத்து வைக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிடல், காணாமற் போனவர்களுக்கான அலுவலகத்தை உடன் இயங்கச் செய்தல். காணாமற் போனோர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பு பொருத்தமான சான்றிதழ்களை வழங்கல்” போன்றவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, காணிகள் யுத்தத்தின் பின் எட்டு வருடங்களாகியும் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினருடைய பிரசன்னம் இனியும் தேவையற்றபடியால், அவர்கள் வசமுள்ள காணிகளையும் விடுவிக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க, வேலையற்ற பட்டதாரிகள், ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மேலும் வடக்கு, கிழக்கிலுள்ள மத்திய அரசாங்க, மாகாண அரசாங்க வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுத்தல். பொலிஸாரின் ஏ.எஸ்.பி தரத்தில் நியமனங்களை விரும்புகின்ற பட்டதாரிகளுக்கு அப்பதவிகளை வழங்க உதவுவதுடன், அரச, தனியார் துறையில் பொருத்தமான வேலைகளை வழங்கல் போன்றவற்றை கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago