2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காரைநகரில் உபபொலிஸ் நிலையம் வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

காரைநகர் பிரதேசத்தில், உபபொலிஸ் நிலையம் ஒன்றை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம், திங்கட்கிழமை (29) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காரைநகர், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் உள்ளது. காரைநகரிலுள்ள மக்கள் நடைபெறும் குற்றச் செயல்கள் தொடர்பிலும் பிரச்சினைகள் தொடர்பிலும் முறைப்பாடு செய்வதற்கு கடல் பயணம் மேற்கொண்டு, ஊர்காவற்றுறைக்குச் செல்லவேண்டியுள்ளது. இதனால், பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, காரைநகரில் உபபொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X