Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 15 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
வலிகாமம் தென்மேற்கு பிரதேசத்தில் 28 கிராமஅலுவலர் பிரிவுகளின் வீதிகளில் போடப்பட்ட திண்மக் கழிவுகளை வலிகாமம் பிரதேச சபை நேற்று வியாழக்கிழமை (14) அகற்றியது.
பிரதேசத்தின் தூய்மையையும், சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு இந்த செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மானிப்பாய், பண்டத்தரிப்பு ஆகிய இடங்களின் வீதிகள் துப்புரவு செய்யப்படாமலும், திண்மக் கழிவுகள் வீதிகளில் மூடைகளாகப் போடப்பட்டும் இருந்தன. இதனை அகற்றுவதற்கு பிரதேச சபையில் ஆளணி மற்றும் வாகன வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் பிரதேசத்தின் சுகாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்குடன் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஒரேநாளில் அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டன.
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago