Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 மே 14 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“ஆட்சி அதிகாரங்களை வைத்திருந்தபோது எதனையும் செய்யாத அரசியல்வாதிகள், இப்போது மற்றவர்களைக் குறைகூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது” என, கடந்த 14 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, இரணைதீவுப் பகுதியில், தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி, இம்மாதம் முதலாம் திகதி முதல் 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், சொந்த இடத்துக்குச் செல்லும் வரையும் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அம்மக்கள்,
“எமது ஊரில், நோய்நொடிகள் எதுவுமின்றி, எந்தக்குறைகளுமின்றி வாழ்ந்து வந்தோம். 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இங்குவந்து குடியேறியதில் இருந்து, உரிய தொழில்வாய்ப்பின்றி, பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றோம்.
"நாங்கள் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேறியதிலிருந்து, எமது சொந்த ஊரில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம். ஆனால், அதற்கான அனுமதியை, எவரும் பெற்றுத்தரவில்லை.
"எம்மிடம் வரும் அரசியல்வாதி ஒருவர், நல்லாட்சியைக் கொண்டுவந்தால் பாலும் தேனும் ஓடும் என்று சொன்னார். ஆனால் அவர், இதுவரை எமது மண்ணை மீட்டுத்தரவிலை.
"நாங்கள், எந்த அரசியல்வாதிகளையும் நம்பாத நிலையில்தான், இன்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். எமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதைவிடுத்து, ஆளுக்கொருவரைக் குறை கூறிச் செல்வதை, நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
"ஆட்சி அதிகாரங்களை கைகளில் வைத்திருந்தபோது எதனையும் செய்யாத அரசியல்வாதிகள், இப்போது மற்றையவர்களைக் குறைகூறி செல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றுத் தெரிவித்தனர்.
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago