2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'குற்றத்தை நியாயப்படுத்தவில்லை'

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என அச்சுவேலி முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை (29) யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது இடம்பெற்ற சாட்சி பதிவின் போதே அவ்வாறு சாட்சியம் அளிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் எதிரியான பென்னம்பலம் தனஞ்செயன் சாட்சி கூண்டில் நின்று சாட்சியம் அளிக்கையில்,
சில குடும்ப பிணக்குகள் காரணமா, நானும் மனைவியும் பிரிந்திருந்தோம். எனது மகன் எனது மனைவியுடனேயே இருந்தார். பலமுறை மகனை பார்ப்பதற்கு முயற்சித்த போதும் எனக்கு அச் சந்தர்ப்பத்தை யாரும் ஏற்படுத்தி தரவில்லை, அவரை பார்ப்பதற்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .