2025 ஜூலை 23, புதன்கிழமை

'குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகடு மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை இரவு மன்னார் பேசாலை சிவ சுப்ரமணிய கோயிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் அங்கிருந்த விக்கிரகத்தின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தகடு மற்றும் ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் வண்மையாக கண்டிக்கத்தக்கது.கடந்த காலங்களில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆலய பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் குறைவடைந்திருந்தன.

ஆட்சி மாற்றத்தின் பின் பல்வேறு பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் மீண்டும் பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.

குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதோடு இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வணக்கஸ்தளங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .