Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணிக் கடற்கரைப்பகுதியிலிருந்து 25 கிலோகிராம் கேரளா கஞ்சா, இன்று வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது என மருதங்கேணிப் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
மருதங்கேணிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது மேற்படி கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேசத்தில் கடற்படையினரின் உதவியுடன் பளைப் பொலிஸார் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இந்தியா, கேரளாவிலிருந்து கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பொதியை, நாளை வெள்ளிக்கிழமை (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
9 hours ago