2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

20 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

George   / 2017 மே 07 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை  கிடைத்த தகவலையடுத்து, புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கைப்பற்றிய கடற்படையினர், பளை பொலிஸாரிடம் அதனை கையளித்துள்ளனர்.

இந்த கஞ்சா தொகை, பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை” என, தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X