2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

130 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Niroshini   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை, மாதகல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (14), 130.68 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியாவிலிருந்து மாதகல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைக்கப் பெற்று, யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வு பொலிஸார் அங்கு சென்ற போது, கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கஞ்சாவை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சா, இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X