2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

2 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

George   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை, பனிப்புலம் பகுதியில் சுமார் 2 கிலோகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரை வியாழக்கிழமை (11) மாலை கைது செய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா, சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையது எனவும், சந்தேகநபர் இந்தக் கஞ்சாலை கொலன்னாவைக்கு கொண்டு செல்வதற்கு தயாரான போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர், தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X