2025 ஜூலை 16, புதன்கிழமை

60 கிலோகிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு 86 மணித்தியால தடுப்புக்காவல்

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை, பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பருத்தித்துறை பதில் நீதவான் பொ.சுப்பிரமணியம், திங்கட்கிழமை (22), உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ்.மீடின் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த சந்தேகநபரை 86 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்குரிய அனுமதியை பதில் நீதவான் பொ.சுப்பிரமணியம் வழங்கியுள்ளார்.

இளவாலைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிகண்டி கடற்கரையில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய இளைஞனொருவர், ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, பதில் நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X