2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

10 கிலோகிராம் புளியம்பழங்கள் மீட்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

10 கிலோகிராம் புளி மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை கடல்மார்க்கமாக கடத்தி வந்த நான்கு பேரை, ஞாயிற்றுக்கிழமை (24) கைது செய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்ஃபர் தெரிவித்தார்.

இன்பசிட்டி பகுதியைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடல் மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, திக்கம் கடல் மார்க்கமாக அதிகாலை வந்து கொண்டிருந்தப் படகினை மறித்து சோதனையிட்ட போது, இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் படகின் அணியத்தின் கீழிருந்த 10 கிலோ கிராம் புளிமூட்டை ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தாம் கஞ்சா எடுத்து வரவே இந்தியாவுக்குச் சென்றதாகவும் எனினும் இந்திய வியாபாரிகள் 1 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு கஞ்சாவுக்கு பதிலாக 10 கிலோகிராம் புளியை கொடுத்துள்ளதாக கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு படகு, மோட்டார் சைக்கிள், 10 கிலோ கிராம் புளி, மற்றும் 2 பரல் எண்ணெய் என்பவற்றை மீட்ட பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X