2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

40 கிலோ கிராம் மாட்டிறைச்சி அழிக்கப்பட்டது

Niroshini   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

துன்னாலை, வேறுண்டை மயானத்தில், இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை  சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட மாட்டிறைச்சியை கைப்பற்றி அழித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 5 பேர் கொண்ட கும்பலொன்று, மயானத்தில் வைத்து மாடொன்றை இறைச்சியாக்கியுள்ளது. தகவல் அறிந்து அங்கு பொலிஸார் அங்கு சென்ற போது, இறைச்சியாக்கியவர்கள், இறைச்சி, தாங்கள் வந்த சைக்கிள்கள் மற்றும் கத்திகளை கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, அவ்விடத்துக்கு கரவெட்டி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் வரவழைக்கப்பட்டு, அவர் முன்னிலையில் சுமார் 40 கிலோகிராம் இறைச்சி அழிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X