2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

106 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இளவாலை கடற்பகுதியூடாக கடத்தி வரப்பட்ட 106 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவரை இன்று சனிக்கிழமை (15) அதிகாலை கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து, இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

இன்று காலை 4:30 மணியளவில், சேந்தாங்குளம் கடற்பகுதியூடாக கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, அக்கடற்பகுதியில் விசேட ரோந்துக்கடமை அதிகரிக்கப்பட்டது. இதையறிந்த சந்தேக நபர்கள், கஞ்சாவினை எடுத்து வந்த படகுடன் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். எனினும் கடலின் 1கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் விசேட கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததையடுத்து, கஞ்சா கடத்தல்காரர்கள் கரையினை வந்தடைந்தனர்.

இதன்போது பற்றைக்குள் மறைந்திருந்த கடற்படையின் புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர்கள் மூவரை கைது செய்ததுடன் 106 கிலோகிராம் கஞ்சா பொதிகளை கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்களில் இருவர் மன்னார் பேசாலை பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றையநபர் மாதகல் பகுதியினைச் சேர்ந்தவர் என்றும் கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பொறுமதி 1கோடியே 54இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணை நிறைவு பெற்றதும், மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X