Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 18 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
வடமாகாண சபையைப் பற்றி கொழும்பிலிருந்து ஓநாயொன்று நேற்று வியாழக்கிழமை (17) ஊளையிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை (18) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல, ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் அதிக நிதி கோரும் நடவடிக்கையில், வடமாகாண சபை செயற்படுகின்றது' என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார்.
'வடக்கு கிழக்கில் இராணுவம் வீடுகளை அழிக்கவில்லையென்றால் பேய்களா வீடுகளை அழித்தன?' என உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் வீடுகள் அழிக்கப்படவில்லை. அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என நாடாளுமன்றத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு கூறினார்.
கிளாலி ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தை, அங்கேயே மீள ஆரம்பிக்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதனை சாவகச்சேரிக்கு மாற்ற வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் முயற்சிக்கின்றார் என சுகாதார அமைச்சர் ப.சத்தியசீலன் கூறினார்.
11 minute ago
27 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
2 hours ago
3 hours ago