2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி பருத்தித்துறை கடற்பரப்பில் கடலட்டை பிடித்த 11 தென்னிலங்கை மீனவர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார்.

மேலும், மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைக்கமாறும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

மேற்படி மீனவர்கள் கடந்த 6ஆம் திகதி இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு விசைப்படகு ஆகியவற்றைப் பயன்படுத்தி கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 6 எரிபொருள் பரல்கள், 30 ஒக்சிசன் சிலிண்டர்கள் என்பன மீட்கப்பட்டன.

நீதிமன்றத்தால் கடந்த 7ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த மீனவர்களின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X