2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'கணவரை இராணுவம் பிடித்ததை, உறவினர்கள் கண்டனர்'

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஏ – 9 பாதை மூடப்பட்டமையால் வன்னிப் பகுதியில் அகப்பட்ட எனது கணவரை, 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று, இராணுவத்தினர் கைது செய்து அழைத்துச் செல்வதைக் கண்டதாக உறவினர்கள் தனக்குக் கூறியதாக, அவருடைய மனைவி குமணலதா, நேற்று சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி பிரதேச அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

'வேலை நிமித்தம், 2006ஆம் ஆண்டு வன்னிக்குச் சென்ற கணவர், ஏ-9 வீதி பூட்டப்பட்டமையால் அங்கு அகப்பட்டுக்கொண்டார். அவருடைய தாயார் அங்கு இருந்தமையால் அவருடன் இருந்தார். 2006ஆம் தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையில் என்னுடன் தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்தார். யுத்தம் காரணமாக அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.

யுத்தம் முடிந்த பின்னர் உறவினர்களிடம் விசாரித்ததில், கணவரின் தாயார் இறந்துவிட்டதாகவும் கணவரை இராணுவத்தினர் பிடித்ததாகவும் கூறினர். வவுனியா உள்ளிட்ட பல இடங்களிலுள்ள முகாம்களில் தேடியும் இன்றுவரையில் எனது கணவன் கிடைக்கவில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X