2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'கப் கலெக்ஸன்' இம்முறை இல்லை

Gavitha   / 2016 ஜனவரி 19 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில், 'பட்டம் கப் கலெக்ஸன்' என்னும் நிகழ்வுக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை (19), கைலாசபதி கலையரங்கில் வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

பட்டம் பெற்றவர்கள் மண்டபத்தை விட்டு வெளியில் வந்த பின்னர், தாங்கள் பட்டம் பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, பொதி செய்யப்பட்டிருக்கும் அன்பளிப்புக்களை, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவர்.

இது காலம்காலமாக பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் விடயமாகும். இது காலப்போக்கில் பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர வெளியில் இருந்து வந்தவர்களும் பெறுவதற்கு பழக்கப்படுத்த முயற்சி செய்து பெறும் குழப்பங்களை ஏற்படுத்தினர்.

அன்பளிப்பு வாங்குவதற்காக முண்டியடித்து, கொடுப்பவரை தள்ளி விழுத்துதல், பெண் பட்டதாரிகளிடம் அங்க சேஷ்டை புரிதல் என்னும் விடயங்கள் அதிகரித்தமையால், கப் கலெக்ஸன் என்னும் விடயத்தைத் தடை செய்யுமாறு பல தரப்பும் கோரிக்கை முன்வைத்தது. அதற்கிணங்க இம்முறை பட்டமளிப்பு விழாவில் கப் கலெக்ஸனுக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும் தடையையும் மீறி இன்று ஒரு சிலர் கப் கலெக்ஸனில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X