2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'கள்' விற்பனை நிலையத்தை இடமாற்றுங்கள்

Sudharshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் அமைந்துள்ள 'கள்'விற்பனை நிலையத்தினை ஒதுக்குப்புறமான இடத்திற்கு இடமாற்றுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாங்குளத்திலிருந்து துணுக்காய் செல்லும் வீதியில் புகையிரதக் கடவைக்கருகில் மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதியில் இந்தக் 'கள்' விற்பனை நிலையத்தை அமைத்திருக்கின்றனர்.

இந்தக் 'கள்' விற்பனை நிலையத்தில் 'கள்' அருந்துபவர்கள் போதையில் பிணக்குகளில் ஈடுபட்டு, அவ்வழியால் செல்பவர்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குவதாகவும் சிலர் புகையிரதத் தண்டவாளங்களில் படுத்து உறங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் 'கள்' விற்பனை நிலையத்தினை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம், பொது அமைப்புகளினால் மனுக் கையளிக்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X