2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'சைக்கிள் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

யாழ்ப்பாணம், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் அடிக்கடி சைக்கிள் திருட்டு இடம்பெறுகின்றது. இது குறித்து விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், தொடர்ந்து நடைபெற்று வரும் சைக்கிள் திருட்டைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு செயலாளரைக் கோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தின் மேல்மாடியில் பொதுநூலகம் இயங்கி வருகின்றது. நூலகத்துக்கு  வரும் மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் சைக்கிள்களை அலுவலக வளாகத்தில் நிறுத்திப்பூட்டி விட்டு மேல்மாடிக்கு செல்வர்.

எனினும், திருடர் பூட்டிய சைக்கிளைத் திறந்து திருடிச்சென்று விடுகிறார்கள். சைக்கிளைப் பறி கொடுத்தவர்கள் இது குறித்துப் பிரதேச சபையின் கவனத்திற்கு தெரியப்படுத்திய போதிலும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

கடந்த சில மாதங்களில் பல சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஒரு வாரத்தில் மட்டும் இரு சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. இந்நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ள பொதுமக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சைக்கிள் திருட்டைத் தடுப்பதற்குப் பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு செயலாளரைக் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X