2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

30 சோடி புறாக்கள் திருட்டு:17 சோடிகளுடன் மூவர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூண்டில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 30 சோடிப்புறாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர், செவ்வாய்க்கிழமை (19) மன்னார் மற்றும் கொழும்புத்துறை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், திருடப்பட்ட 30 சோடி புறாக்களில் 17 சோடி புறாக்களை மன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மீட்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

மன்னார் பகுதியில் கைதான சந்தேகநபர் 56 வயதுடையவர் எனவும், கொழும்புத்துறை பகுதியினைச் சேர்ந்த இருவரும் 26 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், விசாரணையின் பின் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X