2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுமீன்களை மீண்டும் கடலில் விடுங்கள்

Niroshini   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத, வலையில் சிக்கும் சிறு மீன்களை அவை உயிருடன் இருக்கும் போதே கடலில் விடுவியுங்கள். அதன்போதே கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதைத் தடுக்க முடியும்” என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா மீனவர்களிடம் திங்கட்கிழமை (18) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பண்ணை – ஊர்காவற்றுறை, புங்குடுதீவி – வேலணை, காரைநகர் - பொன்னாலை ஆகிய பாலங்களில் கீழ் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தங்கள் வலையில் சிக்கும், சந்தையில் விற்க முடியாத சிறிய மீன்கள் மற்றும் சிறிய நண்டுகளை வீதியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

சிறிய மீன்களைப் பிடித்து வீதியில் போட்டுவிட்டுச் செல்வதால் வீதியில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. அதற்கு மேலதிகமாக, சிறிய மீன்கள் வீணாக பிடிக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களின் பெருக்கம் குறைவடையும். எனவே, வலைகளில் சிக்கும் சிறிய மீன்கள் உயிருடன் இருக்கும் போதே அவற்றை கடலில் விடுமாறு மீனவர்களை கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X