2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிறந்த பண்ணையாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வட மாகாணத்தில் கறவைப்பசு, ஆடு, கோழி ஆகிய கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில் மாவட்ட ரீதியாக சிறந்த பண்ணையாளர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவிப்பதற்கு வடமாகாண விவசாய கமநலசேவைகள் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல் நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இப் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பண்ணையாளர்கள் வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் விண்ணப்பபடிவங்களை அருகிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்று விண்ணப்பப்படிவத்தினை பூரணப்படுத்தி எதிர்வரும் 30ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடந்த மூன்று வருடங்களாக இப்போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டவர்கள் இவ் வருடத்துக்கான போட்டியில் பங்குபற்ற இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X