2025 ஜூலை 19, சனிக்கிழமை

சங்குப்பிட்டி பகுதியில் நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பூநகரி, சங்குப்பிட்டிப் பகுதியில் இரு நடமாடும் வியாபாரிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச சபையின் செயலாளர் மேரி சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் அமுலாக்கல் கூட்டத்தில் பூநகரிப் பிரதேச செயலாளர், சங்குப்பிட்டிப் பகுதியில் சமூக சீர்கேடுகள் மற்றும் மது விற்பனை என்பன நடைபெறுவதாக தனக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாக மாவட்டச் செயலாளரிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் சங்குப்பிட்டிப்பகுதியில் சமூக சீர்கேடுகளுக்கான சூழல், அனுமதியற்ற வர்த்தக நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு பூநகரியின் பிரதேச சபையின் செயலாளருக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பூநகரி பொலிஸார் சங்குப்பிட்டிப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பூநகரி பிரதேச சபை, நடமாடும் இரு வியாபாரிகளுக்கான அனுமதிகளை வழங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையமாக சங்குப்பிட்டி பாலம் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X