2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கடந்த இரண்டு நாட்களில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்று வந்த நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் இணைந்து மானிப்பாய் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (03) நடத்திய சோதனை நடவடிக்கையின்போது, ஆனைக்கோட்டைப் பகுதியில், மின்மானியின் சுழற்சியைக் குறைத்து மின்சாரம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி நபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களின் வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, அந்த அதிகாரிகளுடன், அச்சுவேலி பொலிஸார் இணைந்து திங்கட்கிழமை (04) இரவு நடத்திய சோதனை நடவடிக்கையில் ஈவினைப் பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X