Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 08 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
'யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும், பொலிஸ் முறைபாடுகள் குறைவடைந்தமைக்கு சமூகக் கட்டுப்பாடுகளே காரணம்' என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் பார்னஸ் ஆன்லேக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இராஜாங்க அமைச்சர், திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, பண்ணையில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு பொலிஸார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான வின் என்று கூறப்படுகின்ற தேவை நாடும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இந்த வருடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டு தரவினை பொலிஸார் பட்டியலிட்டு காட்டினர்.
தொடர்ந்து, அதே காலப்பகுதியில் 'வின்' அமைப்பில் பதிவாகிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளின் பட்டியலை அதன் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கையளித்தனர்.
இதில் வின் அமைப்புக்கு கிடைத்த முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளைக் காட்டிலும் அதிகம் இருந்தமையை அவதானித்த இராஜாங்க அமைச்சர், இதற்கான காரணம் என்ன? என வினாவினார்.
அத்துடன், இவ்வாறு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் இடம்பெறுவதற்கான காரணம் என்ன? சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையம் தனியாக இயங்குவதற்கான காரணம் என்ன?, தமிழ் பெண் பொலிஸார் கடமையில் குறைவாக காணப்படுகின்றனர். கலாசாரம் நிறைந்த யாழ். சமூகத்தில் பெண்கள் பொலிஸில் இணைவதை சமூகம் விரும்புகிறதா? போன்ற கோள்விகளையும் இராஜாங்க அமைச்சர் எழுப்பினார்.
இதற்கு வின் அமைப்பின் இணைப்பாளர் பதிலளிக்கையில்,
எமது நிறுவனத்தை நாடி அதிகம் முறைபாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வாறு வரும் முறைப்பாடுகள் சமூக கட்டுப்பாடு, கலாச்சாரம் காரணமாக நீதிமன்றம் செல்வதை விரும்புவதில்லை. இதனால் பொலிஸ் முறைப்பாடுகள் குறைவு.
யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள மது, போதைப்பொருள் பாவனைகள், கட்டுப்பாடற்ற இணையத்தளங்களின் பாவனை, பாடசாலை மாணவர்களிடம் நவீன வகை கையடக்கத் தொலைபேசி பாவனை பேன்றன பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு வழிகோலுகின்றன என பதிலளித்தார்.
யாழ்ப்பாணப் பொலிஸார் பதிலளிக்கையில்,
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்துடன் இணைந்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்தினை நடத்தியபோது, பாதிக்கப்படும் பெண்கள் முறைப்பாடு செய்ய முன்வருதில்லை. இதனால், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு, பெண் பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும், அதிகளவான முறைப்பாடுகள் வருவதில்லை. சமூக கட்டுப்பாடுகள் இதற்கு காரணங்களாக இருக்கின்றன.
மேலும், யாழ்ப்பாண கலாச்சாரத்தை பொறுத்த வரையில் பெண்கள் பொலிஸில் இணைந்து சேவை ஆற்றுவதை 90 வீதமானவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கடமையாற்றுபவர்கள் மீது சமூகத்தின் பார்வை வேறாகவுள்ளது என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இச்சந்திப்பில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிறுவர் மற்றும் பெண்கள் விவாகார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
30 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
4 hours ago