Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் அகப்படவிரும்பவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த டிசெம்பர் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளை நேற்று வியாழக்கிழமை (07) மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, வீமன்காமம் பகுதியில் இராணுவத்தினரின் வதை முகாம் எனச் சந்தேகிக்கப்படும் வீடுகளையும் பார்வையிட வருமாறு வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் எஸ்.சஜீவன், முதலமைச்சரை அழைத்தார்.
ஊடகவியலாளர்கள் நிற்கும் போது, அந்த வீடுகளை சென்று பார்வையிட்டால், சர்ச்சைக்குரிய வீடுகளை வடமாகாண முதலமைச்சர் பார்வையிட்டார் எனச் செய்திகளை வெளியிட்டு, மேலும், சர்ச்சைகளை கிளப்பி விடுவார்கள். அதனால் இன்றைய தினம் (நேற்று) செல்லாமல் ஊடகவியலாளர் இல்லாத ஒரு நாளில் சென்று பார்வையிடுவோம் எனக்கூறிவிட்டு, ஊடகவியலாளர்களைப் பார்த்துச் சிரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .