2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'திட்டமிட்டு கையேந்த வைக்கின்றனர்'

George   / 2017 மே 02 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“மக்களின் சாத்வீக போராட்டங்களை  தொடரவிடாது போராட்டங்களுக்கான பதிலை இந்த அரசாங்கம் விரைந்து வழங்கவேண்டும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீ ஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான உரிய பதிலை வழங்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  அவர் திங்கட்கிழமை இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இறுதி யுத்தத்தின் போது கைகளில் ஒப்படைக்கப்பட்ட எங்களின் உறவுகள் எங்கே என்று கேட்டு தான் இந்த உறவினர்கள் போராடுகின்றார்கள். அவர்களிடம் தொலைந்த  உறவுகளின் சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன.

அரசாங்கம் சர்வதேசத்துக்கு தனது பதிலை விரைவாக வெளிப்படுத்த வேண்டும். இந்த மக்களின் சாத்வீக ரீதியான போராட்டத்தை தொடரவிடமுடியாது. யுத்தம் நிறைவு பெற்று 8 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில் வாயப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை.

தமிழினம், யுத்தம் முடிவுக்கு வரும் வரை கையேந்துகின்ற ஓர் இனமாக இருக்கவில்லை. பொருளாதார தடை விதிக்கப்பட்ட காலத்திலும், அத்தியாவசிய உணவு தேவைகள் உள்ளிட்ட, வசதிகள், வாயப்புக்கள் ஏற்படுத்தப்படாத நிலையிலும், நாங்கள் தன்மானத்தோடும்  கௌரவத்துடனும் வாழ்ந்தோம்.

எமது பிள்ளைகளை யாரிடம் கையேந்துபவர்களாக வளர்க்கவில்லை. ஆனால், திட்டமிட்டு இந்த அரசாங்கம் எம்மை கையேந்துபவர்களாக மாற்றியுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X