2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தென்னையும் வீட்டையும் காப்பாற்றிய ஆசிரியர்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல் வீட்டின் கூரையும் பாதுகாக்கும் செயற்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார்.

வீட்டின் கூரையில் தேங்காய் விழுந்தால், தென்னை மரத்தை தறிப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆசிரியர் மாற்றுவழியில் சிறப்பாக சிந்தித்துள்ளார்.

முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கற்பித்து வரும் இராஜேந்திரம் இரகுமார் என்ற இந்த ஆசிரியர், வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல், தென்னைமரத்தின் இடைநடுவில் வலை போன்ற அமைப்பு ஒன்றைச் செய்து, தேங்காய் அதில் விழுமாறு வட்டவடிவில் அமைத்துள்ளார்.

இதன் மூலம் வீட்டின் கூரையின் மீது தேங்காய் விழாமல் இருப்பதுடன், தென்னை மரத்தை தறிக்காமல் தொடர்ந்தும் அதிலிருந்து பயனைப் பெறுவதற்கு வழியை ஏற்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X