2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருமணத்துக்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரி வீதியிலுள்ள வீடொன்று செவ்வாய்க்கிழமை (29) பகல் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடமைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள், வவுனியாவில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில், வீட்டின் முன்கதவை உடைத்து வீட்டிலிருந்த 250 அமெரிக்க டொலர், 1,500 ரூபாய் பணம் மற்றும் ½ பவுண் நகை என்பன திருடப்பட்டுள்ளன.

திருட்டுப்போன வீட்டில் கட்டப்பட்டிருந்த நாய்க்கு உணவு வைப்பதற்காக சென்ற அயல் வீட்டுக்காரர், வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்து வவுனியாவில் நின்ற வீட்டுக்காரர்களுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில், வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X