2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திருவடிநிலை புனித தீர்த்தக்கரையை புனரமைக்க நடவடிக்கை

Niroshini   / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருவடிநிலை புனித தீர்த்தக்கரையை 4 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல நவீன வசதிகள் கொண்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆலோசனைகளையும் ஆவணங்களையும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை செயலாளர் வழங்கியுள்ளார்.

இதன்மூலம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம், பறாளய் சிவசுப்பிரமணியர் ஆலயம், பறாளய் சித்தி விநாயகர் ஆலயம், சுழிபுரம் மேற்கு ஐயனார் கோயில் திருவடிநிலை வைரவர் ஆலயம் ஆகியன இந்த வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X