2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்கலாம்’

Princiya Dixci   / 2017 மே 11 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் தினத்தையொட்டி, நாடளாவிய ரீதியில் 597 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்திருந்தால், தமிழ் அரசியல் கைதிகளையும் இச்சந்தர்ப்பத்தில் விடுதலை செய்திருக்கலாமென, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து, இந்த வெசாக் தினத்தை மேலும் அர்த்தமுள்ளாதாக்கியிருக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறானதொரு நடவடிக்கை, ஜனாதிபதியினால் செயற்படுத்தப்பட்டிருந்தால், அது அவர் பொறுப்பு வகிக்கின்ற தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு வலுவானதொரு நிலையை எமது மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கும் என, டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X