Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 02 , மு.ப. 09:12 - 1 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
“முள்ளிவாய்க்காலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமானவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒருவர்” என, தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், “நாங்கள் கொல்லப்பட்டாலும் எங்களது கொள்கை உறுதியிலிருந்து விலக மாட்டோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வு சாவகச்சேரியில் திங்கட்கிழமை நடைபெற்றபோது, உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்று அவர்களது உறவுகள் பரிதவித்து கொண்டுள்ளார்கள். அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது என ஏங்கி கொண்டுள்ளார்கள். பட்டதாரிகள் வேலை கோரி மாதக்கணக்கில் வீதிகளில் போராடி கொண்டுள்ளார்கள்.
2016 இல் தீர்வு என, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சொன்னது நடக்கவில்லை. தொடர் பொய்களை அவர் கூறி வருகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டியை வலியுறுத்தி புலிகளையும் போராட்டத்தையும் காப்பாற்ற வேண்டும் என சம்பந்தனிடம் கெஞ்சினேன். ஆனால், அதனை சம்பந்தன் செய்யவில்லை. பல இலட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு சம்பந்தனும் காரணமாக உள்ளார்” என்றார்.
1 hours ago
1 hours ago
நக்கீரன் Monday, 29 January 2018 05:20 PM
வி.புலிகள் சம்பந்தரை ஒரு போடு தடியாகவே பயன்படுத்தினார்கள். பேச்சுவார்த்தையின் போது அவரைத்தான் புலிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் சம்பந்தனின் கையும் வாயும் கட்டப்பட்டிருந்தன. அவரது கருத்துக்கு புலிகள் செவிசாய்க்கவில்லை. 2005 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்த இராசபக்சாவை ஆதரிக்க வேண்டாம் சமஷ்டித் திட்டத்தோடு போட்டியிடும் விக்கிரமசிங்காவை ஆதரியுங்கள் என சம்பந்தன் கெஞ்சியும் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொள்ளவில்லை. மகிந்தாவை அரியணை ஏற்றியது புலிகள்தான். அதன் விளைவுதான் முள்ளிவாய்க்கால். செல்வராசா கஜேந்திரன் போன்றவர்கள்தான் புலிகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago