2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்த வேண்டும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

அரசாங்க பிரதிநிதித்துவ ஆணைக்குழுவுக்கு, அனைத்து சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மக்களும் ஒன்றிணைந்து, எமது மக்களுடைய தீர்க்கப்படாத அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியும் இதுவரை காலமும் மறுக்கப்பட்ட உரிமைகளை வலியுறுத்தியும் நீண்ட காலமாக உரிமைகளுக்காக போராடும் இனம் என்ற அடிப்படையிலும் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்காந்தராசா தெரிவித்தார்.

மேலும், இந்த அரசாங்கம், எமது எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், புதிய அரசியலமைப்புக்கான அரசாங்க பிரதிநிதித்துவ ஆணைக்குழுவுக்கு மக்களால் முன்வைக்கப்பட வேண்டிய அடிப்படை தீர்வு விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்,  திங்கட்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், மக்களுடன் அரசியல் அமைப்புக்கான அடிப்படைகோட்பாடுகள் அதிகாரப் பகிர்வுகள், தேர்தல் முறைமைகள், உரிமைகள் மீதான சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X