2025 ஜூலை 23, புதன்கிழமை

'தற்போதைய அரசியல் பாதை வித்தியாசமானது'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழரது தற்போதைய அரசியல் பாதை வித்தியாசமானது.அதற்கு அடிப்படை பொறுமை காக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 காந்தியூர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலின் போது, தமது தீவிரமான நிலைப்பாடுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் சொற்பளவேனும் ஆதரவைப் பெற்றிராதவர்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் அரசியற் போக்கையும் அழிக்க வன்முறையைக் கையிலெடுத்திருப்பதாக குற்றம் சுமத்தினார். இவ் வன்முறைப் போக்கின் வெளிப்பாடே ஜெனீவா, பேர்ன், டொரன்டோ, சிட்னி போன்ற நகரங்களில் தனக்கு எதிராகச் செய்யப்பட்ட விரோதச்செயல்களாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சார்ந்த வேறொரு தலைவருக்கு எதிராகவும் இம் மாதிரியான செயல்கள் செய்யப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

தமிழர் அரசியலில் வன்முறையினை மீண்டும் தலைதூக்க அனுமதிப்பது எமது போராட்டத்தையும் ஏன் இருப்பையும் கூட பாரிய அச்சுறுத்தலுக்குட்படுத்தும். ஏனைய தமிழ் அரசியற் தலைவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோரையும் இளம் சமுதாயத்தினரிடம் வன்முறையை நிராகரிக்குமாறு வெளிப்படையாக அறிவுறுத்த வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .