2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தவறுதலாக கைது செய்தோம்'

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பிடியாணை இரத்துச் செய்யப்பட்ட சந்தேகநபரை தவறுதலாக கைது செய்ததாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நீதிமன்றில் கூறினார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முழங்காவில் பொலிஸார் ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கை செய்தார்.

குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புபட்ட முழங்காவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், அந்த நபர் சட்டத்தரணியூடாக மன்றில் ஆஜராகி பிடியாணையை இரத்துச் செய்திருந்தார்.

இந்நிலையில், அந்நபரை கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி கைது செய்த பொலிஸார், அவரை மறுநாள் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். இதன்போது, பொலிஸாரை எச்சரிக்கை செய்த நீதவான், கைது செய்தது தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜராகி விளக்கம் தரவேண்டும் என உத்தரவிட்டார்.

அதற்கிணங்க, வியாழக்கிழமை (06) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் ஆஜராகி, இது தவறுதலாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற தவறு இனிமேல் நடைபெறாது என்றும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X