2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'நீதி தாமதித்தால் அரச இயந்திரம் முடக்கப்படும்'

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்' என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

'மாணவர்களின் கொலை தொடர்பான நீதி தாமதிக்கப்படுமாயின், அரசு இயந்திரத்தை முடக்கி போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலைக்கு செல்ல வேண்டி வரும். அத்துடன், மாணவர்களின் குடும்பத்துக்கு நட்டஈடும் வழங்கப்படவேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற போது, அவர் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X