2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'நீதிமன்ற தாக்குதல் சந்தேக நபர்கள் எனது மகன் சிறையில் இருப்பதை உறுதிப்படுத்தினர்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடந்த மே மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்த போது தாங்கள், இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகனை கண்டதாக தன்னிடம் கூறியதாக காணாமற்போன இராசையா சசிந்தன் என்வரின் தந்தை சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

எனது மகன் மானிப்பாயில் சைக்கிள் கடை வைத்திருந்தார். அவருடைய கடைக்கு 1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சென்ற இராணுவத்தினர், மகனைப் பிடித்துச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுற்றவளைப்புக்களின்போது, மகனை முகத்தை துணியால் மறைத்த நிலையில் இராணுவத்தினர் கொண்டு திரிந்ததாக சிலர் என்னிடம் கூறினர். அதன் பிறகு மகன் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை.

இந்நிலையில், புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நீதிமன்றம் கடந்த மே மாதம் தாக்குதலுக்குள்ளானது. இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் இருவர், உங்கள் மகனை அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது கண்டதாக, பிணையில் வெளியில் வந்த பின்னர் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X