2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நினைவு தினம் அனுஷ்டிப்பு...

Kogilavani   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டு வரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 31ஆம் ஆண்டு நினைவுதினம், இன்று வெள்ளிக்கிழமை (02) காலை 7.30 மணிக்கு தாவடியிலுள்ள அவரது நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை சோசலிச குடியரசின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டு அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமரர் தர்மலிங்கத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X